கோவை: தென்மேற்கு பருவமழையையொட்டி கிணத்துக்கடவில் இடைவிடாது பெய்துவரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
இந்தநிலையில், கிணத்துக்கடவு பகுதியில் விட்டுவிட்டு பெய்து வந்த மழை, நேற்று மதியம் முதல் தொடர்ந்து இடைவிடாது பெய்து வருகிறது. இரவு முழுவதும் மிதமான மழை பெய்து வந்தது. இன்று காலை முதல் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமலும், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் வாகனத்தை ஓட்ட இயலாமல் சிரமப்பட்டு சென்றனர்.

மேலும், கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கும் மழை காரணமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வருகை குறைந்த அளவே காணப்பட்டது.