கோவை: குறு மற்றும் சிறு தொழில்களையும், தொழில் முனைவோர்களையும் பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றும், ஏற்கனவே தொழில் துவங்கி, நடத்திக்கொண்டிருக்கும் குறுந்தொழில் முனைவோர்களுக்கும் இச்சலுகைகளை அளித்து உதவ வேண்டும் என காட்மா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் கூறியதாவது:-
"கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டு கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் குறு மற்றும் சிறு தொழில்களையும், தொழில் முனைவோர்களையும் பாதுகாக்கும் விதமாக இன்று (23.07.21) தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சலுகை அறிவிப்புகளில், புதிதாகத் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள், மாநில அரசுத் துறைகளுக்கு ரூ 20 லட்சம் மதிப்பிற்குக் குறைவாக தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் பொழுது, தங்களுக்கான முன்வைப்புத் தொகை செலுத்துதல், முன் அனுபவம் மற்றும் கடந்த கால விற்று முதல் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்புகளை காட்மா சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில், ஏற்கனவே தொழில் துவங்கி, நடத்திக்கொண்டிருக்கும் குறுந்தொழில் முனைவோர்களுக்கும் இச்சலுகைகளை அளித்து உதவ வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்."
இவ்வாறு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.