திருப்பூர்: பல்லடம் அருகே பிறந்த 6 வாரம் ஆன குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜிகேட் தடுப்பூசி (P.C.V ) வழங்குவதற்கான திட்டத்தினை செய்தித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
திருப்பூர்: பல்லடம் அருகே பிறந்த 6 வாரம் ஆன குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜிகேட் தடுப்பூசி (P.C.V ) வழங்குவதற்கான திட்டத்தினை செய்தி துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பிறந்த 6 வாரம் ஆன குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜிகேட் தடுப்பூசி (P.C.V ) வழங்குவதற்கான திட்டம் இன்று முதல் திருப்பூர் மாவட்ட அளவில் துவக்கி வைக்கப்பட்டது.
P.C.V தடுப்பூசி போடுவதன் மூலம் குழந்தைகளுக்கு 6 வார வயதிலிருந்து நிமோனியா, மூளைக்காய்ச்சல் மற்றும் பாக்டீரேமியா போன்ற கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் 29,037 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், நிமோனியா நோயினால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். இந்த தடுப்பூசி பிறந்து 6 வாரம் ஆன குழந்தைகளுக்கு அனைத்து துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் தமிழக அரசின் மூலம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தினை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதற்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி ஒரு ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்குவதற்கு தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய முழு ஒத்துழைப்பினை தர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வினீத், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.