பொள்ளாச்சியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்!

கோவை: பொள்ளாச்சியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த கோயில்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இருப்பினும், கொரோனா வைரஸ் அச்சம் காராணமாக பெரும்பாலான கோயில்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.



இந்த நிலையில், இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோயில் மேலும் ஆனைமலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற மாசாணியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.



கோயில் நுழைவாயிலில் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் சனிடைசர் தெளித்து கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அதேசமயம், அர்ச்சனை நடைபெறவில்லை.

கொரோனா காலத்தில் கோயில்கள் திறக்கப்படாததால் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தது. இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மனை வழிபடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பெண்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...