திருப்பூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு..!

திருப்பூர்: திருப்பூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து பாசன திட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து பாசன திட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.



திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் மூலம் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருவதாகவும், இவையே முக்கிய நீராதாரமாக விளங்கி வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஒரு சுற்று முறை தண்ணீர் கிடைத்து வருவதாகவும் இதில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீரை பெறுவதே விவசாயிகளுக்கு பெரும் வேதனையாக இருக்க கூடிய சூழ்நிலையில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒட்டன்சத்திரத்தில் தண்ணீர் கொண்டு செல்ல 650 கோடியில் திட்டம் ஆலோசனையில் இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது எனவும் அப்படி செல்லும் பட்சத்தில் கோவை திருப்பூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவற்றை நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...