கோவை: பாதாள சாக்கடை பணிகளால் போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட போத்தனூர் மேம்பால பகுதியிலிருந்து செட்டிபாளையம் சாலையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலையில் குழிகள் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் பணிகளால் அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

மேலும், தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் போத்தனூர் செட்டிபாளையம் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

எனவே, பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்படும் குழிகளை விரைந்து மூடி சாலையை செப்பனிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.