கோவை: கோவை ரயில் நிலையத்தில் தினமும் குறைந்த பட்சம் 10 ஆயிரம் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிப்பால், கடந்த மார்ச் மாதம் முதல் பெரும்பாலான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கோவை வழித்தடத்தில் 10-க்கும் குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக கோவையில், கொரோனா பெருந்தொற்று பரவல் வெகுவாகக் குறைந்துள்ளதால், கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில், திருச்சி, மேற்கு வங்கம், பீகார், மும்பை, ராஜஸ்தான், புதுடெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பயணிகள் மூலமாக, கோவையில் கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க, மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ரயில் நிலையத்தின் நுழைவாயில் அருகே பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள், கைகளைக் கிருமிநாசினியால் சுத்தம் செய்த பிறகே நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ரயில்களில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கும் இதே முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘‘கோவையில் தற்போது, கொரோனா பெருந்தொற்று பரவல் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், மீண்டும் அதிகரிக்காத விதமாக ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் உடல் வெப்ப நிலை பரிசோதனைகள் சுகாதாரத்துறை மூலமாக தினமும் மேற்கொள்ளப்படுகின்றன. ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகள், நிலையத்திற்குள் செல்வோரின் உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதோடு, ரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையம் அருகே பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள ஸ்கேனர் கருவி மற்றும் கேமரா மூலமும் பயணிகளின் உடல் வெப்பநிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
கோவை ரயில் நிலையத்தில் குறைந்த பட்சம் தினமும் 10 ஆயிரம் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. வெளி மாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் பயணிகள் மூலமாக கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று பரவக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்று அவர் கூறினார்.