கோவை: சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் 28.70 அடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் 26-வார்டுகள், நகரை ஒட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சிறுவாணி குடிநீர் நீராதாரமாக உள்ளது. அணையிலிருந்து தினமும் குடிநீருக்காக 10-கோடி லிட்டர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டமானது, படிப்படியாகக் குறைந்து 3-அடிக்கும் கீழே சென்றது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், கடந்த சில நாள்களாகச் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்குச் செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 28.70 அடியாக உயர்ந்துள்ளது. மாநகராட்சி சார்பாக 97 எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது.
இவ்வாறு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தெரிவித்தார்.