கோவை: ஆழியாறு அகதிகள் முகாமில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆழியாறு அகதிகள் முகாம் பகுதியில் தமிழக அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசியை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வட்டாட்சியர் முருகராஜ் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று அகதிமுகாமில் சோதனையிட்டனர்.
அப்போது, அங்கிருந்த அரிசி கடத்தல்காரர்கள் தப்பி ஓடினர். சோதனையில் 14 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வட்டாட்சியர் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து குடிமைப்பொருள் வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பேரில் ஆழியார் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.