கோவை: கோவை வழியாக கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு, 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை வழியாக கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய சம்பவத்தில் 2 பேர் கைது செய்த போலீசார், 44 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் தலைமையில் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தினந்தோறும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ரயில் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையொட்டி நேற்று ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயிலில் இருந்து இறங்கி வந்த 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக காணப்பட்டனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்பொழுது அவர்கள் கோவை வழியாக கேரளாவிற்கு 44 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
கோவை வழியாக ரயிலில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். ஐதராபாத்தில் இருந்து கேரளா, திருவனந்தபுரம் செல்லும் ரயில் நேற்று காலை கோவை ரயில் நிலையம் வந்தது. சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருவரை, ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையிட்டபோது, 44 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் தேனியை சேர்ந்த செல்லத்துரை (51), கதிரேசன் (35) என்பது தெரிந்தது. இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.4.5 லட்சம் ஆகும்.
இதனையடுத்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.