கோவை: கோவையில் வீட்டில் தனிமையிலிருந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் அறை கதவை பூட்டிவிட்டு மனைவியிடம் 12-பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் வீட்டில் தனிமையிலிருந்தஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் அறை கதவை பூட்டிவிட்டு மனைவியிடம் 12-பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை தொண்டாமுத்தூரை அடுத்த புத்தூர் ரோட்டில் உள்ள விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (78). இவர் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் நேர்முக உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ரத்தினம் (73), என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
மகன் திருமணம் முடிந்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பிறகு குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள இரண்டு அறைகளில் கணவனும், மனைவியும் தனித்தனியாகத் தனிமையில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் உணவருந்தி விட்டு அறைக்கு தூங்க சென்றனர். இதைப் பயன்படுத்தி வீட்டின் பின்புறமாக கொள்ளையர்கள் நுழைந்து சமையலறை வழியாக உள்ளே வந்தனர். ராமசாமி எழுந்து விடக்கூடாது என்பதற்காக அவருடைய அறையில் வெளிக் கதவைப் பூட்டியுள்ளனர்.
பிறகு அவருடைய மனைவி ரத்தினம் அறைக்குச் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 4-பவுன் செயின் மற்றும் பீரோவிலிருந்த 8-பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். இதனையடுத்து, மனைவி ரத்தினம் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது தன்னுடைய அறை கதவு பூட்டப் பட்டிருப்பது ராமசாமிக்கு தெரிந்தது.
பின்னர் திருடர்கள் சென்றதும் மனைவி அறை கதவை திறந்தார். உடனே இரண்டு பேரும் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனியாக இருந்த முதியவர்களிடம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.