Exclusive: வீட்டு நாய்களை தாக்கும் ‘பார்வோ’ வைரஸ்: கோவையில் பாதிப்பு கிடையாது - கோவை மருத்துவரின் அறிவுரை!

கோவை: சென்னையில், வீட்டு நாய்களுக்குப் பரவும் "பார்வோ" வைரஸ் நோய் தொற்று, கோவையில் கிடையாது. பார்வோ வைரஸ் நாய்களை மட்டுமே தாக்கும், மனிதர்களுக்குப் பரவாது, என கோவை வன உயிரியல் மருத்துவர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.



கோவை: சென்னையில், வீட்டு நாய்களுக்குப் பரவும் "பார்வோ" வைரஸ் நோய் தொற்று, கோவையில் கிடையாது. பார்வோ வைரஸ் நாய்களை மட்டுமே தாக்கும், மனிதர்களுக்குப் பரவாது, என கோவை வன உயிரியல் மருத்துவர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு பார்வோ வைரஸ் தொடர்ந்து தாக்கி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும், கால்நடை மருத்துவமனைக்கு 250 நாய்கள், பார்வோ வைரஸ் தாக்கம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு வரப்படுவதாக, கால்நடை மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கோவையில் பார்வோ வைரஸ் பாதிப்பு, வளர்ப்பு நாய்களுக்கு உள்ளதா? என்பது குறித்து கோவை வன உயிரியல் பூங்கா மருத்துவர் செந்தில்நாதன் சிம்ப்ளிசிட்டி-யிடம் கூறியதாவது:-

வீட்டு நாய்களை தாக்கும் இந்த பார்வோ வைரஸ் பரவல் குறித்து கால்நடைத் துறையினர்கண்காணித்து வருகின்றனர். பார்வோ வைரஸ் என்பது வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை மட்டுமே தாக்குகிறது. இந்த வைரஸ் தெரு நாய்களை தாக்காது.

குடல் பகுதியை தாக்கும் வைரஸ்!

இந்த வைரஸ், ஒரு வயது முதல் ஒன்றரை வயது உள்ள நாய்களை மட்டுமே தாக்கும். இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாய்களுக்குக் காய்ச்சல், வாந்தி, ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படும். பார்வோ வைரஸ் தாக்கிய உடனே, முதலில் அந்த நாயின் குடல் பகுதியே அதிக பாதிப்பு அடையும். பின்னர், அந்த வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் பொது குடலில் உள்ள வழுவழுப்புத் தன்மையை இழக்கச் செய்யும்.

இதயத்தை பாதிக்கும் வைரஸ்

இதன் காரணமாக நோய்வாய்ப்பட்டநாய்களுக்குப் பசி எடுக்காது. பிறகு,அந்த வைரஸ் குடல் முழுவதுமாக பரவி ஜீரண மண்டலத்தை செயலிழக்கச் செய்துவிடும். இறுதியாக, உணவுக் குழாய் வழியாகச் சென்று இதயத்தைச் செயலிழக்கச் செய்துவிடும்.

இந்த வைரஸ் நாய்களின் முடி, பாதம், எலும்பு மஞ்சை ஆகியவற்றை தாக்குவதால் நாய்களுக்கு சோர்வு, நீர்ச்சத்து இழப்பு, ஆகியவை ஏற்பட்டு இறுதியில் உயிர் இழக்க நேரிடும். பொதுவாக, பார்வோ வைரஸ் தாக்கிய 3 நாளிலிருந்து 12 நாட்களுக்குள் இந்த நாய்கள் இறந்து போகும்.மழைக்காலங்களில் மட்டுமே நாய்களைத் தாக்கும் இந்த வைரஸ், தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களுக்குத் தாக்குவது கிடையாது.

மக்கள் அச்சப்பட தேவையில்லை

இந்தப் பார்வோ வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. இவை, ஒரு நாயிலிருந்து மற்றொரு நாய்க்கு மட்டுமே பரவக்கூடியது. எக்காரணம் கொண்டும் மனிதர்களுக்கு இது பரவாது. இது முழுக்க முழுக்க வீட்டில் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு மட்டுமேபரவும். ஏனென்றால், வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். மாறாக, தெரு நாய்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், அவைகளுக்கு இந்த வைரஸ் பரவாது.

தெரு நாய்களைத் தாக்காது

தெரு நாய்கள் எல்லா பகுதிகளிலும் சுற்றித்திரிவதாலும், அதிகமான வெயில், மழை, குளிர் என அனைத்து சீதோஷனத்தையும் தாங்கிக் கொள்வதால் அவைகளுக்கு நல்ல எதிர்ப்புச் சக்தி இருக்கும். தெரு நாய்களுக்கு உடலில் ஒரு காயம் ஏற்பட்டால் கூட, அது தனக்கு தானே அந்த காயத்தைச் சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும்.

கோவையில் பார்வோ வைரஸ் இல்லை

இதுவரை, கோவையில்வீட்டில் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு பார்வோ வைரஸ் அறிகுறி தென்படவில்லை. இதுவரை யாரும் இந்த தொற்று குறித்து சிகிச்சைக்காகக் கால்நடை மருத்துவமனையை அணுகவில்லை. ஆதலால், கோவையில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தேவையில்லாமல் பார்வோ வைரஸ்மக்களுக்குப் பரவும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பார்வோ வைரஸ் கிடையாது. இருப்பினும், மக்கள் அரசு கூறியுள்ள அனைத்து விதமான சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் செந்தில்நாதன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...