ஊரடங்கால் குற்ற செயல்கள் அதிகரிப்பு-கிணத்துக்கடவில் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு!

கோவை: பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து சிறுவர்-சிறுமிகளுக்கு கிணத்துக்கடவு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து சிறுவர்-சிறுமிகளுக்கு கிணத்துக்கடவு காவல்துறையினர்விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் 181-என்ற உதவி தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மகளிர் மட்டும் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று கிணத்துக்கடவு காவல் துறையினர் சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு சிறுவர்-சிறுமிகளுக்குப் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, பெண் தலைமைக் காவலர் கவிதா, காவலர் பவதாரணி, சமூக ஆர்வலர் சக்தி சரண்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறுவர்-சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, சிறுமிகள் தங்களிடம் யாராவது தவறாக நடந்து கொண்டால் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும், மேலும் தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.



பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக ஏதாவது தொந்தரவு இருந்தால் உடனடியாக காவல் துறையிடமும், 181-என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்-சிறுமிகளுக்குப் பேனா போன்ற பொருட்கள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...