கோவை: போத்தனூர் பகுதியில் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையை அடுத்த கண்ணம்பாளையம் கம்பர் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (33). இவர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது அதிலிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த பணம் ரூபாய் 85-ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, பிரபு போத்தனூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில், பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.