கோவை: வேலைக்கு கூட செல்லாமல் தடுப்பூசிகள் கிடைக்க காத்திருக்கிறோம். எங்களுக்கு தடுப்பூசி எப்போது கிடைக்கும்..? என கூறி காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்தை, அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம் காரமடை வட்டாரத்தில் உள்ள இரும்பறை, சின்னக்கள்ளிப்பட்டி, ஆதிமாதையனூர், கல்லாறு அரசுப்பள்ளிகளில் தலா 250 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் மேட்டுப்பாளையம் நகர்நல மையத்திற்கு 500 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, மாவட்ட நிர்வாக இன்று ஒதுக்கீடு செய்திருந்தது.
முற்றுகை போராட்டம்
இதனையடுத்து, காரமடை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி மருந்துகளை ஒதுக்காத காரணத்தால், அங்கு வந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். ஏன் தடுப்பூசிகள் ஒதுக்கப்படவில்லை? கிடைக்குமா, கிடைக்காதா? என்று அத்திரமடைந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தடுப்பூசிக்கு காத்திருந்து தினக்கூலியை இழக்கிறோம்
இதுகுறித்து காரமடையை சேர்ந்த புஷ்பா என்ற பெண் கூறுகையில், பழைய படி முதல் நாளே தடுப்பூசி குறித்து அறிவிக்க வேண்டும். இதனால் தினக்கூலிக்குச் செல்லும் மக்கள் தங்களது கூலியை விட்டு தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.மேலும், காரமடையில் கடந்த பல நாட்களாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஒரு டோஸ் போட்டுவிட்டு மற்றுமொரு டோஸ் போட்டுக்கொள்வதற்காக தங்களது கூலியை விட்டுவிட்டு காத்திருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி குறித்து முதல் நாளே அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த காரமடை காவல் துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை, சுமூகமானதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.