கோவை: கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக, குழந்தைகளின் விவரங்களை சமூகப் பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவை சமூகப் பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள் சிலர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் அந்தக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை விரிவுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களாக இருந்து கொரோனா தொற்றில் உயிரிழந்த பெற்றோரில் ஒருவர் அல்லது தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
எனவே, இவ்வாறு பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களைக் கோவை-திருச்சி சாலையில் ராமநாதபுரம் மகேந்திரா ஷோரூம் பின்புறம் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.