கோவை திருமண்டல கூட்டத்தில் மோதல் சம்பவம் - சி.எஸ்.ஐ பாதிரியார் விடுதலை!

கோவை: கோவை திருமண்டல கூட்டத்தில் மோதல் சம்பவம் தொடர்பாக, சி.எஸ்.ஐ பாதிரியார் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.


கோவை: கோவை திருமண்டல கூட்டத்தில் மோதல் சம்பவம் தொடர்பாக, சி.எஸ்.ஐ பாதிரியார் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

கோவை சி.எஸ்.ஐ, திருமண்டல நிர்வாக குழு கூட்டத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஆலய போதகர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை ரேஸ் கோர்ஸ்சில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற சி.எஸ்.ஐ திருமண்டல நிர்வாக குழு கூட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கடும் மோதலில் ஈடுபட்டனர். இதில் தர்மபுரியைச் சேர்ந்த வக்கீல் நேச மெர்லின் (36), என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதையடுத்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தாக்கப்பட்ட வழக்கில் நேச மெர்லின் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போதகர் சார்லஸ், சாம்ராஜ் அப்பாத்துரை, பாக்கிய ராஜ், பொன் ராஜ், டேனியல், பரமானந்தம், நெல்சன் ஆலய போதகர் வில்சன் குமார் 48, விஜய் மேட்டூர் ஜெயராஜ், ஜேக்கப், அருள் பிரவீன் உள்பட ஆகிய 15 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் கொலை மிரட்டல் தாக்குதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல சி.எஸ்.ஐ ஆலய செயலாளர் ஜேக்கப் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நேசம் மெர்லின் மற்றும் அமிர்தம் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பூர் போதகர் ஜெயின் பால் வில்சன் குமார் என்பவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தாக தெரிகிறது. தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...