நிலுவை தொகையை வழங்க கோரி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

திருப்பூர்: நிலுவை தொகையை வழங்க கோரி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: நிலுவை தொகையை வழங்க கோரி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காக்களிலும் ஒப்பந்த அடிப்படையில் 350க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டதாகவும் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களாகியும் தற்போது வரை தங்களுக்கான தொகையை வழங்கவில்லை என்று சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும், இது குறித்து ஏற்கனவே அந்தந்த தாலுகா அலுவலகங்கள் மற்றும் தேர்தல் பிரிவில் முறையிட்டும் நிலுவைத்தொகை கிடைக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு, தங்களுக்கான நிலுவை தொகையினை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...