கோவை: கோவை கிணத்துக்கடவில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று செட்டிக்காபாளையம், காட்டம்பட்டி, கிணத்துக்கடவு நகரம், சிங்கையன்புதூர் ஆகிய 4 இடங்களில் தடுப்பு முகாம் நடத்தி ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
தடுப்பூசி போடப்படும் தகவல் பொதுமக்களுக்கு இன்று காலை கொடுக்கப்பட்டதால் அனைத்து மையங்களிலும் மக்கள் அதிகளவில் கூடினர்.
முன்னதாக, முதலில் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர், டோக்கன் பெற்றுக் கொண்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கிணத்துக்கடவில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வந்தாலும், கொட்டும் மழையும் பாராமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
மேலும், அதிகளவில் மக்கள் கூடியதால் கொரோனா தடுப்பூசிக்கான டோக்கன்களை கேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.