போத்தனூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே ரயில்வே மின்மயமாக்கல் பணிகளை முதன்மை பொறியாளர் ஆய்வு!

கோவை: போத்தனூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே ரயில்வே மின்மயமாக்கல் பணிகளை முதன்மை பொறியாளர் ஆய்வு செய்தார்.


கோவை: போத்தனூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே ரயில்வே மின்மயமாக்கல் பணிகளை முதன்மை பொறியாளர் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி, தற்போது வரை 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது.



இந்நிலையில், இன்று தென்னக ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு முதன்மை பொறியாளர் சுனில் மற்றும் சேலம் மற்றும் பாலக்காடு கோட்ட சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் மின்மயமாக்கல் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை உள்ள ரயில்வே கிராசிங் மற்றும் ரயில் நிலையங்களில் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



தற்போது நடத்தப்படும் ஆய்வின் அறிக்கையை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு சமர்ப்பிக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் போது போத்தனூர் ரயில் நிலைய டிவிஷன் அதிகாரிகள் தமிழ்ச்செல்வன், மாஜி, ஹாஜி உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...