வால்பாறையில் தேயிலை தோட்ட நிர்வாக பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொழிற்சங்கங்களுடன் கூட்டுக் குழுவினர் ஆலோசனை!

கோவை: வால்பாறையில் தேயிலை தோட்ட நிர்வாக பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொழிற்சங்கங்களுடன் கூட்டுக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் தேயிலை தோட்ட நிர்வாக பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொழிற்சங்கங்களுடன் கூட்டுக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த மாதம் முடிவு பெற்று விட்டது. இருப்பினும், தேயிலை தோட்ட நிர்வாகங்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தொழிற்சங்கத்தை அழைக்காமல் இழுத்தடித்து வந்தனர்.



இதன் காரணமாக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் வால்பாறை வீ. அமீது தலைமையில் கூடி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 600 சம்பளம் வழங்கவும், 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒவ்வொரு தேயிலை தோட்ட அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது, ஹைபாரஸட் எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, கூட்டுக்குழு தலைவர் வால்பாறை வீ. அமீது தலைமையில் நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தற்போதைய சம்பளம் கிடைக்க வேண்டிய சம்பளம் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக்குப் பிறகு இக்கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு இறுதியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 475 வழங்க வேண்டும் என நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் மேற்கண்ட கோரிக்கையை அரசிடம் எடுத்துக்கொண்டு சென்று நடைமுறைப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது, தொழிற்சங்கத்தலைவர்கள் சௌந்தரபாண்டியன், வழக்கறிஞர் வினோத்குமார், செந்தில்குமார் எல்பிஎப், யு கருப்பையா, கலைவாணன் ஐஎன்டியூசி, வீரமணி, கேசவமருகன் வி.சிறுத்தை, மோகன் மாணிக்கம், பெரியசாமி, ஏஐடியூசி, கல்யாணி மதிமுக. டி.பி.ஷாஜி, அருணகிரி, பால்ராஜ், தங்கவேல் பிஎம்எஸ், சலாவுதீன் அமீது உட்பட பலர் பங்கேற்றனர். இறுதியாக பரமசிவம் சிஜடியூ நன்றி கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...