கோவை: கோவை மாவட்டத்தில் ஊரடங்கில் போக்சோ வழக்குகள் அதிகமாகி உள்ளதற்கு குழந்தைகள் மீது பெற்றோர்கள் கண்காணிப்பு குறைவாக இருப்பதே முக்கிய காரணம் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் ஊரடங்கில் போக்சோ வழக்குகள் அதிகமாகி உள்ளதற்கு குழந்தைகள் மீது பெற்றோர்கள் கண்காணிப்பு குறைவாக இருப்பதே முக்கிய காரணம் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்ட காவல்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் பெண்கள் குழந்தைகள் எதிராக நடக்க கூடிய குற்றங்கள் புகார்கள் பற்றி எவ்வாறு விசாரிப்பது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மகளிர் காவலர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளோம்.
1. 12-18 வயது பெண் குழந்தைகள் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்த வழக்குகள்: 73
2. உண்மையாக முகம் தெரிந்தவர்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கு நடைபெறும் பாலியல் குற்ற வழக்குகள்: 32
3.பெற்றோர்களே நடத்தி வைத்த குழந்தை திருமண போக்சோ வழக்குகள்: 50
இதை தவிர்த்த போக்சோ வழக்குகள்: (ஆபாச புகைப்படம் எடுப்பது போன்றவை) 50
இதை குறைக்கும் நடவடிக்கையாக மிகப்பெரிய விழிப்புணர்வு நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஒரு வார காலமாக அதிகப்படியான விழிப்புணர்வு முகாம்களை பள்ளி நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் போன்ற இடங்களில் நடத்தி உள்ளோம். ஆன்லைன் மூலம் அதிகமான விழிப்புணர்வு முகாம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம். இதற்கு பள்ளி நிர்வாகமும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
அதேபோல, பெற்றோர்களும் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணம் சார்பாக புகார்கள் இருந்தால் கண்டிப்பாக தகவல் அளிக்க வேண்டும். போக்சோ வழக்கில் கைதாக கூடிய (முகம் தெரிந்த நபர்கள் பிரிவு) அனைவரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
குவாரிகள் குறித்து ஆய்வு நடத்தியதில் அனுமதி பெற்ற 142 குவாரிகள் மட்டுமே இயங்கி வருகிறது. அதிக எடையை கொண்டு செல்லும் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறோம். சிசிடிவி அலாரம் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. போக்சோவை பொருத்தவரை துடியலூரில் 7, மேட்டுப்பாளையம் 7, தடாகம் அன்னூர் 5, கோமங்கம் 7, ஆனைமலை 5, கருமத்தம்பட்டி, சூலூர், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் 4 என வழக்குகள் பதிவாகி உள்ளது. திருட்டு சம்பவங்களை ஆராய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கு தினசரி பதிவு செய்து வருகிறோம். குண்டர் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, கோவையில் 6 கோட்டங்கள் மூன்று கோட்டங்களில் தான் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. எனவே, மீதம் உள்ள கோட்டங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க மேலிடத்தில் கேட்டு வருகிறோம். கடந்த ஒன்றரை வருடங்களில் 115 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளது. ஊரடங்கில் போக்சோ அதிகரித்துள்ளது. பெற்றோர்களின் கண்காணிப்பு குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம். பெற்றோர்கள் அதிக கவனிப்புடன் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். செங்கல் சூளைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆன்லைன் விழிப்புணர்வில் ஆசிரியர்களும் பங்கேற்பர். இந்த ஒரு ஆண்டில் காவலர்கள் குற்றம் செய்ததில் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.