சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி கோவை வாலிபரிடம் ரூ. 32 ஆயிரம் மோசடி செய்த நபர் கைது!

கோவை: சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி கோவை வாலிபரிடம் ரூ. 32,000 மோசடி செய்த நபரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


கோவை: சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி கோவை வாலிபரிடம் ரூ. 32,000 மோசடி செய்த நபரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (33) என்பவர் வெளிநாட்டு வேலை தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தேடி உள்ளார். அப்போது, தினேஷ் என்பவரின் செல்போன் எண் கிடைத்தது. அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, அவர் சிங்கப்பூரில் வேலை உள்ளது. அதற்கு மருத்துவச் சான்று அவசியம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, முத்துக்குமார் மருத்துவச் சான்று தயார் செய்துவிட்டு தினேஷை தொடர்பு கொண்டார். அப்போது அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டுமென்றால் விமான பயண கட்டணம் ரூபாய் 5,000 விசா கட்டணம் 27,633 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை முத்துக்குமார் ஆன்லைன் மூலமாக அவருக்கு அனுப்பி உள்ளார். பணத்தை எடுத்துக் கொண்டவர் செல்லை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை அறிந்த முத்துக்குமார், ஆன்லைன் மூலம் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய தேவி மற்றும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தினேஷ் சென்னையில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் சென்னை சென்று தினேசை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் சொந்த ஊர் சேலம் மாவட்டம் கண்ணன்குறிச்சி என்பது தெரியவந்துள்ளது.

இதேபோல, பல பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அவர் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...