வால்பாறையில் உள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் 150 அடியை தாண்டியது!

கோவை: வால்பாறை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 150 அடியை தாண்டியது.


கோவை: வால்பாறை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 150 அடியை தாண்டியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பி குளம் ஆழியாறு திட்டத்தின் பிரதான அணையான சோலையார் அணை உள்ளது. கடந்த இரண்டு வார காலமாக தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறை பகுதியில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சோலையார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேல் நீரார் அணை மற்றும் கீழ் நீரார் அணை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சோலையார் அணை கடந்த ஒரு வார காலமாக தினசரி 5 அடி உயர்ந்து, இன்று காலையில் 152 அடியாக உள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி மேல் நீரார் அணையில் 45 மி. மீட்டர் மழையும், கீழ் நீரார் அணையில் 27.மி.மீ.மழையும், சோலையார் அணை பகுதியில் 30 மி.மீ மழையும், வால்பாறை நகரில் 31 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சோலையார் அணைக்கு 2258.70 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்திக்காக பவர்ஹவுஸ் - 1-- ஒன்றுக்கு 398.38 கனஅடி நீரும், பவர் ஹவுஸ் 2-க்கு 167.59 கன அடி நீர் என மொத்தம் 565.97 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது.

மேலும், 165 அடி உயரமுள்ள அணையில்நீர்மட்டம் 152.59 அடியாக உள்ளது. சோலையார் அணையின் நீர்வரத்து பகுதியான கூழாங்கல் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வால்பாறை பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சோலையார் அணைவிரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணித் துறையினர் அணையை கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...