கோவை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து, தமிழக அரசு முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் அறிவிப்பில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மக்கள் மத்தியில் ஸ்மார்ட் கார்டில் குடும்ப பெண்கள் தலைவியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என வதந்தி பரவி வருகிறது.
தமிழகத்தில் 5-வகையான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான கார்டுகளில் குடும்பத் தலைவர் எனும் இடத்தில் ஆண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், 'PHH மற்றும் PHH-AAY என்ற இரு வகையான ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவராக பெண்ணின் புகைப்படம் இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் ஆயிரம் ரூபாயை பெறமுடியும்' என, சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
இதை நம்பி, வட்டார வழங்கல் அலுவலர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து, குடும்பத் தலைவரின் புகைப்படம் மட்டுமின்றி, ரேஷன் அட்டைகளின் வகைகளை மாற்றவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த சூழலை இடைத்தரகர்கள் பயன்படுத்தி, பொதுமக்களிடம் ஆயிரக் கணக்கில் பணம் பெற்று ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
குடும்பத் தலைவரின் புகைப்படத்தை நீக்கிவிட்டால், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களை பெற முயலும்போது சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறுகையில், "குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அரசிடமிருந்து இன்னும் முறையான அறிவிப்பு வெளியாகவில்லை; எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" என அறிவுறுத்துகின்றனர்.
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, தமிழக அரசு முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.