கிணத்துக்கடவு அருகே அதிக பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளுக்கு அபராதம்! காவல்துறை எச்சரிக்கை!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளுக்கு 1.52 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளுக்கு 1.52 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு பகுதியில் அரசு அனுமதி வழங்கியதை விட கூடுதலாக கற்களை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த இரண்டு நாட்களாக கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் காவல்துறையினர் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அதிக லோடு ஏற்றி வந்த 5 டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதித்த நிலையில், இன்றும் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக அரசு அனுமதி வழங்கியதை விட கூடுதலாக கற்களை ஏற்றிச் சென்ற 5 டிப்பர் லாரிகளுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதிக கற்கள் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதிக்கப்பட்டு வரும் சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கு இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...