தடுப்பூசிகளுக்கு டோக்கன் வழங்கும் விவகாரம்: கலெக்டர் தலைமையில் கண்காணிக்க கோரிக்கை

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்படுகிறதா? என கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்படுகிறதா? என கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 30க்கும் மேற்ப்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வருகிறது. தினமும் தடுப்பூசி வருகைக்கு ஏற்ப, மையங்களுக்கு 250 முதல் 300 டோஸ் வரை தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் அதிகாலை முதலே தடுப்பூசி மையங்களான -- அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

இதனை தவிர்க்கும் பொருட்டு, தினமும் காலை 8 மணிக்கு தடுப்பூசி எந்த மையங்களில் போடப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் கொடுத்து வருகிறது. அந்தந்த மையத்தில், எவ்வுளவு தடுப்பூசிகள் போடப்படும் என்கிற விவரம் தெரிவிக்கப்பட்டு காலை 10 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 11 மணிக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதனிடையே, தடுப்பூசிக்கு ஏற்ப டோக்கன் வழங்குவதை கண்காணிக்க கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி கூறுகையில், ‘‘கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஒரு பாட்டில் தடுப்பூசி மருந்தில் 12 முதல் 14 வரை தடுப்பூசிகள் போடப்படுகிறது. இதனிடையே, ஒதுக்கப்படும் தடுப்பூசி மருந்ததிற்கு ஏற்ப டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. அப்போது, டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கையை விட தடுப்பூசி மருத்துகள் சில இடங்களில் மீதம் ஆகிறது.

உதாரணத்திற்கு 250 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் நிலையில், கூடுதலாக 5 பேருக்கு போடும் அளவிற்கு தடுப்பூசி மருத்துகள் சில இடங்களில் மீதம் ஆகிறது. இது போன்ற விவரங்களை அதிகாரிகள் சரிவர தெரிவிப்பது இல்லை. எனவே, தடுப்பூசி எண்ணிக்கைக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்படுவதை குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இந்த விவகாரம் கண்காணிக்கப்பட வேண்டும்,’’ என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...