கோவை: கடன் வாங்கி தருவதாக கூறி தனியார் மருத்துவமனை அதிபரிடம் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் மோசடியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணைக்காக இரண்டு நாள் காவல் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கடன் வாங்கி தருவதாக கூறி தனியார் மருத்துவமனை அதிபரிடம் ஊராட்சி மன்றதலைவர் உட்பட 2 -பேர் மோசடியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணைக்காக இரண்டு நாள் காவல் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை நீலம்பூர் பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்த மாதேஸ்வரன் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
சுமார் 50 கோடி செலவில் மருத்துவமனை புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்மாதேஸ்வரன், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம் 55, உட்பட 4 பேரைத் தொடர்பு கொண்டு பேசினர்.
இதனையடுத்து, மாதேஸ்வரன் நண்பர் ஒருவரின் மூலமாக இவர்களை தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
அப்போது அவர்கள் மருத்துவமனை விரிவாக்க பணிக்காக வங்கிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கடன் வாங்கித் தருவதாகவும், இதற்காக தங்களுக்கு 2.85 கோடி கமிஷன் தர வேண்டும் என கூறி உள்ளனர்.
இந்நிலையில், 2.85 கோடி கொடுத்த நிலையில் பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடன் வாங்கி தரவில்லை என கூறி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் மாதேஸ்வரன் புகார் செய்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் உள்படஇரண்டு பேரையும் சிறையில் அடைத்தனர்.
இவர்களிடம் 2 சொகுசு கார்கள், ராஜஸ்தான் மாநிலம் சைலேஷ் பிரபாகர் சிங்கர் என்பவர் பெயரில் வங்கியில் பெறப்பட்டதாகவும், ரூபாய் 49.85, கோடி மற்றும் 49.95 கோடி 2 போலி வரைவு காசோலைகள் இருந்தன.
பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ஊராட்சி தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி கடன் வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணைக்காக இரண்டு நாள் காவல் அளிக்கப்பட்டுள்ளது. இவர் மோசடியாக அபகரித்த பணத்தை மீட்கும் வகையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.