கோவை: கோவை மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டி 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கோவை மாவட்டத்தில் தற்போது 10 லட்சத்து 45 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்தகள் உள்ளனர். இந்நிலையில், புதிய ரேஷன்கார்டுகள் வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் புதிதாக அச்சடித்து வரப்பட்ட ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. அதன்பின்னர், சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கியதால், புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீது வருவாய் துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த மே மாதம் புதிய அரசு பொறுப்பேற்றதும் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்தபோதும், கொரோனா தொற்று காரணமாக, வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, கொரோனா தொற்று அச்சம் குறைந்ததை தொடர்ந்து, புதிய விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணியில் வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்தல் நடைமுறை, கொரோனா அச்சம் காரணமாக புதிதாக ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது, தொற்று குறைந்ததை தொடர்ந்து நாள்தோறும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
மேலும், தமிழக அரசு புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள காரணத்தினால், இந்த மாத இறுதிக்குள் அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, அடுத்த மாதம் தொடக்கம் முதல் புதிய ரேஷன்கார்டுகள் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
கடந்த ஜனவரி மாதம் 12 ஆயிரத்து 800 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. எனவே, தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், புதிய ரேஷன்கார்டுகள் விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.