கோவை: கோவையில் ரயில்வே அதிகாரியைத் தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை போத்தனூர் மேட்டூர் பகுதியை சேர்ந்த அழகு கலை நிபுணர் கல்பனா, இவர் தனது வீட்டில் நான்கு நாய்கள் வைத்து வளர்த்து வருகிறார்.
அவற்றை அடிக்கடி வெளியில் விட்டு விடுவதாகத் தெரிகிறது. இதனால் அந்த நாய்கள் சாலையில் வருபவர்களை கண்டு குறைத்துள்ளது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கல்பனாவிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை.
இதனால் அந்த பகுதி மக்கள் போத்தனூர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்பனாவைக் கண்டித்தநிலையில், ஆத்திரமடைந்த கல்பனா வீட்டின் முன்பு நின்று பொதுமக்களுக்கு இடையூறாகச் சத்தம் போட்டுள்ளார்.
இதனைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே அதிகாரியான ஜெய்சங்கர் 64, அவரைக் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த கல்பனா அங்கு இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஜெய்சங்கரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ஜெய்சங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜெய்சங்கர் போலீசில் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.