தொண்டாமுத்தூரில் சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது!

கோவை: தொண்டாமுத்தூர் பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பெயின்டிங் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: தொண்டாமுத்தூர் பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பெயின்டிங் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த16-வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.தற்போது பள்ளி விடுமுறை என்பதால் ஆலந்துறையில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளியான கார்த்திக் 21 என்பவரும் இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கடைக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலந்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மாயமான சிறுமியை போலீசார் தேடி வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் சிறுமியை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், பன்னிமடையில் இருப்பதாக தகவல் வரவே போலீசார் அங்கு சென்று சிறுமியையும், கார்த்தியையும்,ஆலந்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது கார்த்திக் சிறுமியை கடத்திச்சென்று பன்னிமடையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...