கோவை: கோவையில் தொடர்ந்து தனியாக வரும் பெண்களிடம் நகைகளைப் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வருபவர் முருகேசன் என்பவரின் மகள் ஐஸ்வர்யா (23). இவர் பெரிய நாயக்கன் பாளையம் ஸ்ரீராம புரம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு தனது சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஏ.டி.டி காலனி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 -வாலிபர்கள் ஐஸ்வர்யாவின் கழுத்திலிருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியைப் பறித்துத் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ஐஸ்வர்யா கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண் போலீசிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதே போன்று, கோவை கே.கே. புதூர் ராமலிங்க நகரைச் சேர்ந்த சாந்தி 46, இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கல்லூரிக்குச் சென்று விட்டு பேருந்தில் வீடு திரும்பினார். பின்னர் அங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது எதிரே வந்த மர்ம நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தியின் கவனத்தைத் திசை திருப்பி கழுத்திலிருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
சாந்தியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சாந்தி சாய்பாபா காலனி போலீசில் புகார் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.