கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை வனத்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில மாதங்களாக வால்பாறை நகரில் உள்ள காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா, அண்ணா நகர், எம்.ஜி.ஆர் நகர், வாழைத்தோட்டம் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் வாழைத்தோட்டம் பகுதியில் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இருப்பினும் சிறுத்தைகள் கூண்டில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் வால்பாறையின் மத்திய பகுதியான காந்தி சிலை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் 3 சிறுத்தைகள் நடமாடிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந்த் ஐ.எப்.எஸ், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனத்துறை மருத்துவர் மனோகரன், ஆனையாளர் ரமேஷ், வட்டாட்சியர் ராஜா, வனச்சரகர், வானவர்கள் வனத்துறையினர் சிறுத்தைகள் நடமாடிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.