கோவை: வால்பாறையில் தாவரவியல் பூங்கா பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து வந்தனர். பணிச்சுமை, குறைவான சம்பளம் மற்றும் வனவிலங்குகள் தாக்குதல் போன்ற காரணங்களால் ஏராளமான தொழிலாளர்கள் கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற கீழ்ப்பகுதிக்கு சென்றுவிட்டார்கள்.
இதன் காரணமாக வால்பாறையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை எட்டியது. இந்நிலையில், வால்பாறை ஒரு மலைப் பிரதேசம் என்பதாலும் இயற்கை காட்சிகள் அதிகம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் வருகை சிறிது இருந்து வந்தது.
இந்த நிலையில், வால்பாறையில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக வால்பாறையில் உள்ள சாலைகள் அனைத்தும் இருவழிச் சாலைகளாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சுற்றுலா பயணிகளுக்காக படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தாவரவியல் பூங்கா பணிகள் நடைபெற்று வந்தாலும் தற்போது பணிகள் மிகவும் மந்த நிலையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க தாவரவியல் பூங்காவை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென வியாபாரிகள் நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.