கோவை: இராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் தனியாருக்கு விற்பதற்கெதிராக வரும் 23ம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இயங்கும் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் வருகின்ற 23.07.2021 ம் தேதியன்று, கொடூரமான அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்திற்கு எதிராகவும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியார் கையில் ஒப்படைப்பதை நிறுத்த வலியுறுத்தியும், மின்சாரத் திருத்தச் சட்டம், புதிய மோட்டார் வாகனச் சட்டங்களை கைவிடக் கோரியும், இரயில்வே, மின்சாரம், சுரங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீடு நிதி நிறுவனங்களை தனியாருக்கு விற்கப்படுவதை கைவிடக் கோரியும் மேற்படி ஆர்ப்பாட்டம் ஜூலை 23 காலை 10.00 மணிக்கு கோவை மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.