ஸ்மார்ட் உடுமலை திட்டம்: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி ஆய்வு!

கோவை: ஸ்மார்ட் உடுமலை திட்டம் துவக்க கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்தகுமார் நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தினார்.


கோவை: ஸ்மார்ட் உடுமலை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்தகுமார் நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தினார்.

உடுமலைக்கு மிக அருகில் உள்ள அமராவதி பகுதியில் அமராவதி அணை, அமராவதி அணை பூங்கா, முதலைப்பண்ணை மற்றும் படகு இல்லம் உள்ளது. உடுமலையில் திருமூர்த்தி மலை பகுதியில் திருமூர்த்திமலை அணை, திருமூர்த்திமலை அணையை ஒட்டியுள்ள சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவி உள்ளது. அதுபோல உடுமலையில் உள்ள சின்னாறு பகுதியில் பறவைகள் அதிகம் வந்து வாழும் பகுதியாக பறவைகளின் குட்டி சரணாலயமாக உள்ளது.

உடுமலையிலிருந்து திருமூர்த்திமலை அமராவதி மற்றும் சின்னாறு பகுதிகளுக்குச் செல்லும் வழியில் உள்ள இயற்கை சூழ்நிலையானது மிகவும் எழில் மிகுந்த காட்சியுடன் இதமான குளிர்ந்த கால நிலையில் உள்ளது.

மேலும், உடுமலைக்கு அருகில் பழனி முருகன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், ஆழியாறு அணை பூங்கா, குரங்கு அருவி மற்றும் மற்றும் மலை பிரதேச சுற்றுலா பகுதிகளான வால்பாறை, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தளங்கள் உள்ளன. எனவே, உடுமலை பகுதியானது சுற்றுலாத் தளங்களின் சிறந்த ஹாட்ஸ்பாட் ஆக உள்ளது.

எனவே, இத்தகைய சிறந்த புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்கள் உடுமலை மற்றும் உடுமலையை சுற்றியுள்ள பகுதியில் உள்ளதால் உடுமலை நகர பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.



எனவே, உடுமலை பகுதியை மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்ட சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் அமைத்து சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டவும் மற்றும் உடுமலை பகுதி மக்களின் நலனுக்காகவும் உடுமலை நகரத்தை சீர்மிகு நகரமாக மாற்ற மாவட்ட சுற்றுலாத் துறையின் திருப்பூர் மாவட்ட சுற்றுலா தொலைநோக்கு வளர்ச்சித் திட்டம் அடிப்படையில் ஸ்மார்ட் உடுமலை திட்டம் கொண்டுவர மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் உடுமலை நகராட்சி துறை முடிவு செய்துள்ளது.



இந்தத் திட்டத்துக்கான ஆலோசனை மற்றும் ஆய்வுப்பணி மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஸ்மார்ட் உடுமலை திட்டத்தின் கீழ் பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், உடுமலை நகரப்பகுதியில் தீம் பார்க், நீச்சல் குளம், I love Udumalai செல்பீ ஸ்பாட், எழில் உடுமலை, நடைப்பயிற்சி மேற்கொள்ள ஸ்மார்ட் நடைபாதை, புதிய சிறுவர் பூங்காக்கள் உருவாக்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய திட்டங்கள் முதல் கட்டமாக நடைமுறைக்கு கொண்டுவர ஆலோசனை மற்றும் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.



இந்த ஆய்வின்போது உடுமலை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி பொறியாளர் தங்கராஜ் மற்றும் உடுமலை சுற்றுலா வளர்ச்சிக் குழுவை சார்ந்த உடுமலை அமேசான் பள்ளி இயக்குனர் மத்தீன் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் சண்முகராஜ், ஜவகர், பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...