கோவையில் கள்ளக்காதலில் பெண்ணை தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கோவை: கோவையில் கள்ளக்காதலில் பெண்ணை தாக்கி, மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த உதவி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை துணை ஆணையர் உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் கள்ளக்காதலில் பெண்ணை தாக்கி, மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த உதவி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை துணை ஆணையர் உத்தரவிட்டார்.



கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பார்த்திபன் (55). இவருக்கும் கோவை சிங்காநல்லூர் வரதராஜ புரத்தைச் சேர்ந்த அபிநயா (40) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. அபிநயா கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய தந்தை உழவர் சந்தையில் வேலை செய்கிறார்.

இந்நிலையில், பார்த்திபன் அபிநயாவிற்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பார்த்திபன் அபிநயாவிற்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். சம்பவத்தன்று அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் அபிநயாவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், உழவர் சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அபிநயாவின் தந்தை மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில், கோவை மாநகர சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனை நேற்று மாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...