பெட்ரோல் விலை: இமாலய உச்சம்! நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம்!

கோவை: பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் அதிகரித்து வருவதால், நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.


கோவை: பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் அதிகரித்து வருவதால், நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில், எப்போதும் இல்லாத அளவிற்குப் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி உள்ளது சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இதுகுறித்து விவாதிப்பதற்காக அவையின் இதர அலுவல்களை ஒத்தி வைத்திட வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியுள்ளது.

இதனிடையே, சபாநாயகருக்குபி.ஆர்.நடராஜன் கொடுத்துள்ள ஒத்திவைப்புத் தீர்மானம் பின்வருமாறு:

"கடந்த இருபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள போதிலும், கலால் வரிகளை உயர்த்தி இவ்வாறு பெட்ரோலியப் பொருள்கள் விலைகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

“நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டு, சாமானிய மக்கள் கடும் துன்பங்களுங்ககு ஆளாகியுள்ளார்கள்.

இவ்வாறு மிகப்பெரிய அளவில் வரிச் சூறையாடல் மேற்கொள்ளப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில்பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...