கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளுக்கு 1.42 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் நேற்று மாலை கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) ஜெயக்குமார், உதவி ஆய்வாளர்கள் கணேசமூர்த்தி, அருள்பிரகாஷ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரிகளை சோதனையிட்ட காவல்துறையினர், அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக கற்களை ஏற்றிவந்த 5 டிப்பர் லாரிகளை பிடித்தனர்.
இதையடுத்து, அதிக பாரம் ஏற்றி வந்த 5 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த லாரிகளுக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதனை தொடர்ந்து, அபராத தொகையை லாரி உரிமையாளர்கள் கட்டிய பின்னர் பிடிக்கப்பட்ட லாரியை காவல்துறையினர் விடுவித்தனர்.