கோவை: மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிணத்துக்கடவு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் 181 என்ற தொலைபேசி எண்ணை கோவை மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மகளிர் மற்றும் குழந்தை எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிணத்துக்கடவு பேரூராட்சி சமுதாய கூடத்தில் கிணத்துக்கடவு காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பெண் தலைமை காவலர் கவிதா, காவலர் பவதாரணி, சமூக ஆர்வலர் சக்தி சரண்யா ஆகியோர் கலந்துகொண்டு பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, பாலியல் ரீதியாகவும், பெண்களுக்கு எதிரான குடும்ப பிரச்சனை, வரதட்சணை கொடுமை போன்ற சம்பவங்கள் அரங்கேறினால் காவல்துறையினர் அறிமுகப்படுத்திய 181 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம் என்றும், மேலும் தற்போது ஆன்லைனில் வகுப்பு மூலம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவதால் ஆன்லைன் வகுப்பு நடப்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.