கோவை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வரும் 23, 24 தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று மற்றும் நாளை கோவை, நீலகிரி, தேனி உட்பட சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் 23-ஆம் தேதி வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழல், அம்பத்தூரில் தலா 4 சென்டிமீட்டர், பெரம்பூர் 3 சென்டிமீட்டர், வால்பாறை சென்னை நுங்கம்பாக்கம் தேவாலாவில் தலா 2 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.