கோவையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோவில் கைது

கோவை: கோவையில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவையில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை காரமடை, சிக்கரம் பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அவர் உறவினர், விக்ரம் வயது 20 கட்டிட வேலை செய்து வந்துள்ளார். தொழிலாளி. இந்த நிலையில், சிறுமியிடம் நட்பாக பழகி வந்த விக்ரம், நாளைடைவில், அவரை காதலிப்பதாக கூறி உள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு அந்த மாணவி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த விக்ரம் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, விக்ரமிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடி வந்து அவரது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து விசாரித்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட விக்ரமை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...