அரசு நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகி பையா கிருஷ்ணன் பங்கேற்க தடை கோரி அதிமுக வழக்கு: தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கோவை: கோவை அதிமுக உடையாம்பாளையம் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோபாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், திமுக மாவட்ட செயலாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போல் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர் எனவும் இது ஜனநாயகத்துக்கு முரண்பாடானது என்று குறிப்பிட்டிருந்தார்.


கோவை: கோவை அதிமுக உடையாம்பாளையம் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோபாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், திமுக மாவட்ட செயலாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போல் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர் எனவும் இது ஜனநாயகத்துக்கு முரண்பாடானது என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே, அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோவை மாவட்ட திமுக செயலாளர் பையா கிருஷ்ணனை காரணம் காட்டி வழக்கு தொடர்ந்து இருந்தார்.. இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கோவை மாவட்டம், உடையாம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் தேர்ந்தெடுக்கப்படாத சூழலில் கோவை நகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான பையா ஆர்.கிருஷ்ணன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி போல, அரசு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் தலைமையேற்று, நிவாரண உதவிகளை வழங்கியதாகவும், இது சட்டவிரோதம் என்பதால், அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், தலைமையேற்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துகுமார் தெரிவித்தார்.

வழக்கமாக, அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு எந்த பங்கும் இல்லை என்ற போதும், இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக மாவட்ட செயலாளருக்கு தடை விதித்து உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...