கோவை: கோவையில், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பெண் மற்றும் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள், போதை மாத்திரைகள், போதை ஊசிகள் செலுத்திக் கொள்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோக கஞ்சா விற்பனைகள் மாணவர்களை குறிவைத்து நடந்து வருகிறது. போலீஸார் பல்வேறு விதமான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கைது செய்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில், போதை மாத்திரையை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த ஒரு பெண் உட்பட ஒரு வாலிபரை கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நகரில் அண்மைக்காலமாக இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வலிநிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து சிரஞ் மூலம் செலுத்தி, போதை சுகம் அடைவதை ஒரு சில இளைஞர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதுபற்றி தீவிர நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போதை மாத்திரை விற்போர் மற்றும் அதனைப் பயன்படுத்தி வருவோரை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பின்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த பஷீர் என்பவரின் மகன் பெக்கி என்கிற ரஷீது(32) என்ற வாலிபரை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர். இதேபோல குனியமுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள குளக்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் மற்றும் பெண் ஒருவரை சோதனை செய்தனர். அவர்களிடம் நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் குனியமுத்தூர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்பவரின் மனைவி பானு(50), ரியாஸ்(33) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் நசுருதீன் என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.