நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சி.எஸ்.ஆர் நிதி மூலம் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டம்... அமைச்சர் அறிவிப்பு..!

கோவை: நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சி.எஸ்.ஆர் நிதி மூலம் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.



கோவை: நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சி.எஸ்.ஆர் நிதி மூலம் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.



தமிழக கேரள எல்லையான மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஜிகா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



இதனைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ‘‘கொரோனா பேரிடரால், உலகம் சவாலைக் சந்தித்து வரும் நிலையில்... அடுத்தடுத்த வைரஸ் பாதிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.



அந்த வகையில் தற்போது, கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக தமிழக - கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரப்படுகிறது. மேலும், ஜிகா வைரஸ் நோயை கட்டுபடுத்தும் விதமாக ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி ஊரகப் பகுதிகளில் 21,000 பேர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொசுக்களை லார்வா நிலையிலே அழிக்கும் விதமாக கம்ப்யூசியா மீன்களைக் வளர்த்து அதன் மூலமும் கொசு ஒழிப்பு பணிகளில் கோவை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்குத்தான் அதிகம் தடுப்பூசி ஒதுக்கியுள்ளோம். 1,09,700 தடுப்பூசிகளைக் கோவைக்கு வழங்கியுள்ளோம். தனியார் மருத்துவமனைகளிலும் சி.எஸ்.ஆர் நிதி மூலம் இலவசமாக தடுப்பூசி வழங்க இருக்கிறோம். அதை இந்தியாவிலே முதல்முறையாக கோவையில் செயல்படுத்த இருக்கிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவுத்தம்பதி ஊராட்சி தலைவர் கோமதி செந்தில் குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...