கோவை: வால்பாறை - பொள்ளாச்சி பிரதான நெடுஞ்சாலையில் பாதுகாப்பு சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 64 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை உள்ளது. வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குவதாலும் வால்பாறைக்கு ஒரே ஒரு சாலை உள்ளதால் இந்த சாலையில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, வணிகப் பயன்பாடு வாகனங்கள், அரசுப் பேருந்துகள், கார்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன.
இதனை கருத்தில் கொண்டு 40 கிலோ மீட்டர் உள்ள மலைச் சாலையில் சாலைகள் விரிவாக்கம் மற்றும் தடுப்புச்சுவர்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் அப்பர்பாரளை தேயிலைத் தோட்ட பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பாதுகாப்பு சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள மலைச்சாலையில் உள்ள வளைவுகளில் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக விபத்தின்றி பாதுகாப்பாக வாகனங்களை இயக்க முடியும் என்று நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.