பொள்ளாச்சி அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினர் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது - 17 வயது சிறுவன் தலைமறைவு!

கோவை: பொள்ளாச்சி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 14 வயது சிறுமி ஒருவர் வயிற்றுவலி காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட ஆறு பேர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில், தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக சிறுமி தெரிவித்தார்.

இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் மகரஜோதி(31) மற்றும் 19 வயது மிக்க மூன்று இளைஞர்கள், 16 வயது மிக்க ஒருவர், 17 வயது மிக்க ஒருவர் என 6 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாகி உள்ள 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...