கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் சமூக நீதி கட்சியின் மாநில தலைவர் பன்னீர்செல்வம், தூய்மைப் பணி நியமனம் பெற்று தூய்மைப் பணி செய்யாதவர்களை பணி செய்ய அனுப்பி வைக்குமாறு உதவி ஆணையாளரிடம் தாம்பூலத் தட்டுகளுடன் மனு அளித்தார்.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் சமூக நீதி கட்சியின் மாநில தலைவர் பன்னீர்செல்வம், தூய்மைப் பணி நியமனம் பெற்று தூய்மைப் பணி செய்யாதவர்களை பணி செய்ய அனுப்பி வைக்குமாறு உதவி ஆணையாளரிடம் தாம்பூலத் தட்டுகளுடன் மனு அளித்தார்.
கடந்த ஆண்டு கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கான வேலைக்கு பட்டதாரி இளைஞர்கள் உட்பட பலரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் பலரும் தூய்மைப் பணியை செய்யாமல் அலுவலகப் பணியினை செய்து வருவதாக புகார்கள் எழுந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப் படுவதாகும் புகார்கள் எழுப்பப்பட்டது.
இந்தநிலையில், தூய்மைப் பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்டு தூய்மைப் பணி செய்யாதவர்களை வேலைக்கு அனுப்ப வலியுறுத்தி மத்திய மண்டல உதவி ஆணையாளரிடம் வெற்றிலை பாக்கு இனிப்புகளுடன் கூடிய தாம்பூலத் தட்டுடன் சென்று மனு அளித்தனர்.
இதுகுறித்து பேசிய அவர், ‘‘கடந்த ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருக்கும்பொழுது 549 பேர் தூய்மைப் பணிக்காக பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்களின் 325 பேர் இன்று வரை ஒரு நாள் கூட தூய்மை வேலைக்கு வராமல் அலுவலக வேலை செய்து வருகின்றனர்'' என தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரிகள் இருந்தால் தூய்மைப் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர், இந்த 325 பேரும் தூய்மைப் பணி செய்யாமல் சம்பளம் வாங்கி வருவதாகத் தெரிவித்தார்.
இந்த செயலானது தூய்மைப் பணி என்பது ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் செய்கின்ற வேலை என்ற பிம்பத்தை கட்டமைப்பது போல் உள்ளது என தெரிவித்தார். எனவே, தூய்மைப் பணிக்காக நியமனம் பெற்றவர்களை தூய்மைப் பணிக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.