நீலகிரி: நீலகிரி அருகே முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் சில கிராமங்களில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் முதுமலை வனப்பகுதியில் உள்ள முதுகுழி கிராமத்தை சேர்ந்த விவசாயி குஞ்சுகிருஷ்ணன்(49) மளிகை பொருட்கள் வாங்க வனப்பகுதி வழியே சென்றுள்ளார்.
அப்போது, புதரில் பதுங்கியிருந்த புலி ஒன்று அவரது கழுத்தை கவ்வியுள்ளது. இதில், மூச்சு திணறி கிருஷ்ணன் அதே இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சரகர் தயாநந்தன், மருத்துவர் ராஜேஸ்குமார் உட்பட வனத் துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியின் ஒரு பகுதியை இறந்த குஞ்சுகிருஷ்ணனின் உறவினர்களிடம் வழங்கினர்.