கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது!

கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை உப்பிலிபாளையம் வரதராஜபுரம் ரோட்டை சேர்ந்தவர் அனுசியா (23). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக உக்கடம் சென்றார்.

பின்னர், பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். உக்கடம் சுங்கம் பைபாசில் சென்றபோது அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அனுசியாவிடம் பணம் கேட்டார். பயந்துபோன அவர் அந்த வாலிபரிடம் 500 ரூபாய் கொடுத்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடினார்.

இதுகுறித்து அனுசுயா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் பணம் பறித்தது, தெற்கு உக்கடம் புல்லுகாட்டைச் சேர்ந்த உமர் கோயா (24) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...